Aprilia RS 457: வெறும் 159 கிலோ எடையில் சூப்பர் பைக் அறிமுகம்!

Advertisements

அப்ரிலியா (Aprilia)  நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக அதன் RS 457 சூப்பர் பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பைக் Aprilia Racing பாரம்பரியத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் சூப்பர் பைக் விரும்பிகள் மற்றும் ஆர்வலர்களிடம் இந்தப் பைக் நிச்சயம் நல்ல பெயர் எடுக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக MotoGP பந்தயத்தில் நல்ல முன்னேற்றம் பெற்றுவரும் Aprilia Racing அதைச் சார்ந்து RS 660 பைக்கை உருவாக்கியது. இதிலிருந்து பல அம்சங்கள் எடுக்கப்பட்டு இந்தப் புதிய RS 457 உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் முன்பக்கம் டபுள் பேரிங், புதிய வகை அண்டர் பெல்லி சைலன்சர், ஸ்லீக் 2 இன் 1 எக்ஸாஸ்ட் வசதி, முழு LED ஹெட் லேம்ப், புதிய 5 இன்ச் TFT கலர் இன்ஸ்ட்ருமன்ட் கிளஸ்டர் டேஷ்போர்டு வசதி போன்றவை இந்தப் பைக்கிற்கு நவீன லுக் தருகின்றது.

பைக்கில் ஒரு புதிய வகை ட்வின் சிலிண்டர் லீகுய்ட் கூல்டு DOHC என்ஜின், 8 வால்வு, 48 BHP பவர், வெறும் 159 கிலோ எடை இருப்பதால் அசுர வேகத்தில் செல்லலாம்.இந்தப் பைக்கை முழுவதும் அலுமினியம் பிரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேபோல 41mm போர்க், ப்ரீ லோட் அடஜஸ்ட் மோனோ ஷாக் வசதி, ஸ்டீல் ஸ்விங் ஆர்ம் வசதிகள் இருப்பதால் சிறந்த ஹாண்ட்லிங் நமக்குக் கிடைக்கும்.

பிரேக்கிங் வசதிக்காகப் பிரீமியம் ByBre 320mm முன்பக்க டிஸ்க் பிரேக், பின்பக்கம் 220mm ஸ்டீல் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ABS, 17/17 இன்ச் ஸ்போர்ட்ஸ் ரிம், 110/70 முன்பக்க டயர், 150/60 பின்பக்க டயர் வசதி இருப்பதால் சிறந்த திறன் கிடைக்கும்.சூப்பர் பைக்குகளில் பயன்படுத்தும் ECU இந்தப் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரைட் பை வயர், 3 ரைடிங் மோட், அடஜஸ்ட் செய்யக்கூடிய பவர், ட்ரெக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிப்ட்டர் வசதிகள் இருக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *