Captain Pat Cummins: யாருமே கண்டுகொள்ளாத உலக கோப்பை நாயகன்..!

யாருமே கண்டுகொள்ளாத  கோப்பை வென்ற நாயகன்..! ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸின்.

உலக கோப்பை வென்ற  ஆஸ்திரேலிய  அணியின்  கேப்டன் பேட் கம்மின்ஸ் விமானம்மூலம் கோப்பையோடு ஆஸ்திரேலியாவுக்கு    சென்றார். அப்போது ரசிகர்கள் பெரும் கூட்டமாக வந்து ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில்  அங்கே ஒரு சில ரசிகர்கள் மட்டுமே இருந்தனர். அதுமட்டுமல்லாது ஊடகவியலாளர்களும், புகைப்படதுறையினரும் மட்டுமே அங்குக் குழுமியிருந்தனர். இதே இந்தியாவாக இருந்திருந்தால் இந்திய ரசிகர்கள் விமான நிலையம் முன்பு தாரைத் தப்பட்டையுடன், மேள தாளம் முழங்க, வானவேடிக்கையுடன்  அலைகடலெனத் திரண்டு வந்து மாலை அணிவித்து வீரர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பர்.

வெற்றியாளரைக் கொண்டாடுவதும், வாழ்த்துவதும் மனித நேயத்தை காட்டிலும் நாட்டுப்பற்றை பறை சாற்றும். இது தாண்டா உலகம். அவருக்குக் கோப்பையை மதிக்கத் தெரியவில்லை. அந்த நாட்டு மக்களுக்கு அவரை மதிக்கத் தெரியவில்லை.

இந்நிலையில் டி20 தொடர் நடைபெறஉள்ளது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்த்ல் நடக்க உள்ளது. ஆனால் இப்போட்டியில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு மாத்தியூ மற்றும் சூர்யகுமார் போட்டியை முன்னெடுத்து செல்வார்கள் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *