
வடலூரில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்த மர்மநபர்கள் மூன்று செல்போன்கள் , 1 1/2 பவுன் தங்க நகையை மற்றும் 15,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் மகன் அமலோற்பராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான வடலூருக்கு விடுமுறைக்காக வந்துள்ளார்.இரவு தனது வீட்டில் மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் அதிகாலை மூன்றரை மணி அளவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தனது வீட்டில் மனைவியின் கைப்பையில் இருந்த பீரோ சாவியை எடுத்துப் பீரோவை திறந்து அதில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் 8000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
மேலும் வீட்டினுள் வைக்கப்பட்டுள்ள செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர் தொடர்ந்துஅதே பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் அடுத்த அடுத்து 2 செல்போன் மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் நடேசன் நகர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மர்ம நபர்கள் தெருவில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து இப்பகுதியில் செல்போன் திருட்டு சம்பவம் இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ள நிலையில் வடலூர் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது
வடலூர் காவல்துறையினர் பொதுமக்களின் நலன் கருதி தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

