
அரூர் அருகே பட்டப்பகலில் இரண்டு வீடுகளில் சுமார் 23 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தை சேர்த்தவர்கள் செந்தாமரை, ஜெயக்குமார்.இவர்களது வீட்டில் கடந்த 06ம் தேதி அன்று பட்டப் பகலில் ஒரே நாளில் இரண்டு வீட்டு கதவின் பூட்டை உடைத்து சுமார் 23 சவரன் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரூர் ரவுண்டானா கச்சேரி மேடு பகுதியில் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.அப்போது ஈச்சம்பாடி கிராமத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செந்தாமரை வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆறு சவரன் தங்க நகைகளும் அதே போல ஜெயக்குமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 17 சவரன் தங்க நகைகள் என மொத்தம் 23 சவரன் தங்க நகைகளை மீட்கப்பட்டு திருடன் ராஜ்குமார் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர் அரூர் காவல்துறையினர்.


