Sep 2023 Monthly Rasi palan: ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

Advertisements


அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே:

 

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் குரு- ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலவும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கிய ரீதியாகப் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

பண வரவுகள் சற்ற ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீர்கள். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கோபத்தை குறைத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல், டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.

புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:

தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றிக் குரு கவசம் படித்து வழிபட்டால் குருவின் அருள் பரிபூரணமாய் கிட்டும், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் &- 22-09-2023 மாலை 03.35 மணி முதல் 24-09-2023 இரவு 07.18 மணிவரை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *