Renuka Swamy Murder Case:நடிகைக்கு 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பியது கண்டுபிடிப்பு!

பவித்ரா கவுடா அந்தக் கணக்கை முடக்கிய பின்பும் ரேணுகா சாமி போலி கணக்கைத் தொடங்கி மீண்டும் பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது.

பெங்களூரு:கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் ரசிகர் மன்றத்தினர், கூலிப்படையினர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நடிகை பவித்ரா கவுடா மற்றும் தர்ஷனுக்கு எதிரான வலுவான ஆதாரங்களைச் சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.

அதன்படி கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீசார் தீவிரமாகத் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் ரேணுகா சாமி பயன்படுத்திய சமூக வலைதளங்கள்குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகை பவித்ரா கவுடாவிற்கு 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து பவித்ரா கவுடா அந்தக் கணக்கை முடக்கிய பின்பும் ரேணுகா சாமி போலி கணக்கைத் தொடங்கி மீண்டும் பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பவித்ராவின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான தகவல்களைப் பெற இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கும் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *