கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்!

சென்னை: 

கோவை, நீலகிரிக்கு இன்று (டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரிக்கு இன்று (டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 200 மி, மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,02) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், 115.6 மி.மீட்டர் முதல் 201.4 மி.மீட்டர்வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர்வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *