
Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது “வேட்டையன்” படப் பணிகளை முடித்துள்ள நிலையில், அந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தனது 171வது திரைப்பட பணிகள் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்தத் திரைப்படத்திற்கு “கூலி” என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தத் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

ஏற்கனவே இந்தத் திரைப்படத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. அதேபோல நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகள் ஸ்ருதிஹாசன் இந்தத் திரைப்படத்தில் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மற்றொரு நடிகை தற்பொழுது “கூலி” திரைப்பட பணிகளில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜயின் “பிகில்” திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ரெபா ஜான், தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில், ஒரு திரைப்பட பணியில் ஈடுபட்டு வருவதாகவும். அது தனக்கு மிக மிக ஸ்பெஷலான திரைப்படம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் “கூலி” திரைப்படத்தில் பிரபல நடிகை ரெபா ஜான் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள்குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

