Ravi Shankar Prasad: தென்னிந்திய கட்சிகளுக்குப் பாஜக எச்சரிக்கை!

Advertisements

புதுடில்லி: “பதற்றத்தை உருவாக்கிப் பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” எனப் பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதுகுறித்து டில்லியில் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பறிக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் இந்திய குடிமக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கிப் பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள். குறிப்பாகத் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மாநில கட்சிகள் நிறுத்த வேண்டும்.

மேற்குவங்கத்தில் பொய் குற்றச்சாட்டுக்களை மம்தா பானர்ஜி பரப்புகிறார். நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எந்த அளவிற்கு அவர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துன்புறுத்தப் படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கிறது. யாருடைய வேலையோ குடியுரிமையோ பறிக்கப்படாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்.

வாக்கு வங்கி அரசியலுக்காகக் கெஜ்ரிவால் பேசி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் வெற்றி பெற்றதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாகச் சொல்லி வருகிறார். இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் அவதூறு பரப்புகின்றன?. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *