TNPSC GROUP 4: இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள்..!

Advertisements

TNPSC GROUP 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC GROUP 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுளது. தேர்வு முடிந்த 3 மாதத்திற்குள் முடிவுகள் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் தேர்வு நடைபெற்ற மூன்று மாதங்களில் டிஎன்பிஎஸ்சி முடிவுகள் வெளியாவது முதல்முறையாக இருக்கும்.

கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், வனக்காவல், வனக் கண்காணிப்பாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர்உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் இந்தத் தேர்வுமூலம் நடத்தப்பட உள்ளன. அதேநேரம், காலிப்பணியிடங்களை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்புகள் ஜூன் 18ஆம் தேதி வெளியாகின.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *