
இயக்குனர் ஹரி அவர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர்.
ஆம், பல முன்னணி ஹீரோக்களுக்கு திருப்புமுனை படங்களை கொடுத்தவர் இவரே. சிம்பு, விக்ரம், சூரியா, விஷால் என இவர்களின் திரை வாழ்வில் பல முக்கிய படங்களை கொடுத்து அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த ஹீரோக்களை கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. அதே போல பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
கோவில், சிங்கம் சீரிஸ், சாமி, அருள், தாமிரபரணி, வேல் போன்ற படங்களை கூறலாம். ஆனால், ஒரே மாதிரியான கதைகளங்கள் மற்றும் டெம்ப்ளேட் போன்று திரைக்கதைகளை கொண்டு படங்களை இயக்கி வந்ததால், ரசிகர்களுக்கு அது ஒரு அலுக்கும் விஷயமாகவே சில வருடங்களாக தோன்றி வருகிறது. இதனால இயக்குனர் ஹரி ஒரு சரியான வெற்றியை பதிவு செய்தே சுமார் 10 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது எனலாம்.
தற்போது மீண்டும் விஷால் – ஹரி கூட்டணி இணைந்து உள்ளது “ரத்னம்” படத்தின் மூலமாக, மேலும் இவர்கள் இணைவது இது மூன்றாவது முறையாகும். அதே போல பல வருடங்கள் கழித்து ஹரியின் ஆஸ்தான கம்போசர் DSP, பாடலாசிரியர் விவேகா இந்த கூட்டணிக்கு வலு சேர்க்க இணைந்துள்ளனர்.
தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இப்படத்தை அடுத்த வருட கோடை விடுமுறையை ஒட்டி கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போதே அமேசான் பிரைம் ஓடிடி தளம் ஒரு பெரும் தொகைக்கு, அதாவது இதுவரை விஷால் படங்கள் வாங்கப்படாத தொகைக்கு வாங்கி உள்ளது.
மேலும், பிரபல இசை நிறுவனத்திடம் ஒரு பெரிய தொகைக்கு விற்க டாக்ஸ் நடந்து வருகிறது. ஒரு தேசிய விருது இசையமைப்பாளர் இப்படத்தில் பணிபுரிவதால் இதை வைத்து இசை உரிமத்தை பெரிய தொகைக்கு விற்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.

