உக்ரைன் துறைமுக நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுக நகரான ஒடேசா அருகே நேற்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், வேளாண் உள்கட்டமைப்பு வசதிக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன. சில தினங்களுக்கு முன் கருங்கடல் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுக நகரை குறிவைத்து ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதே போல் ஒடேசா நகரின் மற்றொரு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 6 பேர் படுகாயமடைந்தனர். கருங்கடல் அருகே அமைந்துள்ள ஒடேசா துறைமுகத்தில் இருந்து உணவு பொருட்கள் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரஷ்யா தாக்குதலால் உணவு பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *