“போராட அனுமதி இல்லையா?” – தமிழக அரசுக்கு எதிராக மா.சுப்பிரமணியன் கண்டனம்.!

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அனுமதிப்பதற்குப் பதிலாகத் தமிழக அரசு போராட்டக்காரர்களைத் தீவிரவாதிகளைப் போல நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தவெக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்-குமாருக்கு எதிராகத் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த ஒரு மாதமாகத் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் ‘ரீல்ஸ்’ சார்ந்த நிர்வாகம் மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

கிரிக்கெட் மைதானம் ஒன்றில் அமைச்சர் சரத் குமார் தனது கையில் ஒரு பொடியை நசுக்குவது காணப்பட்டது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த காலங்களில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராகக் காவல்துறை மிகவும் திறம்படச் செயல்பட்டது என்று கூறினார்.

தற்போது, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அனுமதிப்பதற்குப் பதிலாக, போராட்டக்காரர்களைத் தீவிரவாதிகளைப் போல நடத்திவருவதாகத் தெரிவித்தார். இப்போராட்த்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரைக் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

இதுபோல மதுரையில் திமுகவினர் அமைச்சர் சரத்குமாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தவெக எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *