
நியூசிலாந்து அணி அபார வெற்றி
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தற்போது வரையில் 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 16ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தைத் தொடங்கினர். 47.3வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சேர்த்தது. கடைசியாக 50 ஒவரில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து 289ரன்களை எடுத்தால் வெற்றியெனக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசியாக ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது படு தோல்வி அடைந்தது.

