ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் – தவெக கூட்டணியில் சலசலப்பு!

Advertisements
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள வெட்டுமணியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட ஜார்ஜ் ரபின்சனின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, விழாவில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும்போது, வருகின்ற 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்தார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் இதற்கு உடன்படவில்லை என்றால், அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் தங்கள் பதவிகளைத் துறப்போம் என்று தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சு தற்போதைய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *