ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் – தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஆசியக் கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் ஆசியக் கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் குரூப் பி பிரிவில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் தாய்லாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 64 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 16 ஓவர்களில் 65 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இதில் சிறப்பாகப் பந்துவீசிய தீப்தி சர்மா ஒரு மெய்டன் ஓவருடன் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *