தடைகளை தாண்டி வெற்றி காண்பது என்பது அனைவருக்கும் அமைந்து விடாது.
அது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வரம். அப்படி பெரும் பின்னணி இன்றி தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருப்பவர் தான் அஜித். ஆம், யாரிடமும் யோசனை கேட்காமல் தனக்கு சரி என்றால் ஒரு இயக்குனரை ஓகே செய்து விடுவார் தல. அப்படி பலருக்கு திரைத்துறையில் வாழ்வளித்து வந்துள்ளார் தல.
துணிவு படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு அஜித் தீவிரமாக உடல் இடையை குறைத்து உழைத்து வரும் படம் தான் “விடாமுயற்சி”. ஆம், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், அருண் விஜய், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், ஆரவ் என இப்படி ஒரு மாபெரும் நட்சத்திர படையே நடித்து வருகிறது விடாமுயற்சி திரைப்படத்தில்.

படத்தின் 40 முதல் 50 சதவீத ஷூட்டிங் நிறைவு பெற்று உள்ள சூழலில் இப்படத்தை அடுத்த வருடம் தல பிறந்த நாள் அன்று கொண்டு வர லைக்கா பிளான் செய்து வருகிறது.
மேலும், மூன்றாவது முறையாக ராக் ஸ்டார் அனிருத் அஜித் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், விடாமுயற்சி படத்தின் கதை கசிந்து உள்ளது. கதையின்படி, அஜித், திரிஷா இருவரும் ஒரு பயணத்தில் தொலைந்து போகின்றனர், அப்படி தொலையும் இருவரும் சேர்ந்தார்களா, அடுத்த நடக்கும் டுவிஸ்ட் தான் “விடாமுயற்சி”.
இதை கேள்விப்பட்டு உள்ள இணைய வாசிகள் கதை ரொம்ப பழைய கதையாக இருந்தாலும், மகிழ் திருமேனியின் ஸ்கிரீன் பிளே மீது நம்பிக்கை உள்ளதால் நிச்சயம் படம் நன்றாக இருக்கும் என நம்பிக்கையோடு உள்ளனர்.
