Advertisements

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான்கு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து இன்று விவாதம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று மீண்டும் நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.
இதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளித்து உரையாற்றுவார்கள். மேலும், விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் தங்களது துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர்.
Advertisements



