ஸ்பெயினை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி!

உலகக்கோப்பை ஹாக்கித் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள வாவ்ரே நகரில் 16ஆவது உலகக்கோப்பை ஹாக்கித் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
இதில், தொடக்கம் முதலே விறுவிறுப்புடன் சிறப்பாக விளையாடிய ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியின் 44ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்ட்ரூதாப் வெற்றிக்கான கோலை அடித்தார்.
ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வெல்வது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *