Congress Working Committee meeting:எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு… காங்கிரஸ் தீர்மானம்!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.இந்தச் செயற்குழு கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று மாலையில் புதிய காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும்போது ராகுலை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *