Radosław Sikorski: ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்குத் தோல்வியில்தான் முடிவடையும்!

Advertisements

ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்குத் தோல்வியில்தான் முடிவடையும் என்று போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார்.

இரண்டு ஆண்டுகளைத் தாண்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது உக்ரைன் மீது ரஷியா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதுண்டு. இதற்குப் போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷியாவுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாமென ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார். அப்போது ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்குத் தோல்வியில்தான் முடிவடையும். இருந்தபோதிலும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல்கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். போலந்து உலகளாவிய சவால்களுக்குப் பொறுப்பேற்க தயாராக உள்ளது. ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானது என்றார்.

நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து ரஷியா, பெலாரஸ் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *