நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள், ஆனால் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்கையில், அந்தக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் மக்கள் எங்குப் போவார்கள், என்ன செய்வார்கள்? என்று வினவியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு முதியோருக்கான விலையில்லா வேட்டி சட்டை அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில்,
ஒரு நாளிலேயே பல நியாய விலைக் கடைகளில் வேட்டி சட்டை எப்படி தீர்ந்து போகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


