Rabid Dog Attack: பெண்னை கடித்து குதறிய வெறி நாய்!

விருத்தாசலம் அருகே வீட்டிற்குள் படுத்திருந்த பெண்னை, வெறி நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்து கடித்துக் கொதறி விட்டு தப்பித்து ஓடியது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கோ.ஆதனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என எட்டு பேரை, வெறிநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து உள்ளது. அவ்வாறு பலரை கடித்த வெறி நாய், ராஜசேகர் என்பவரின் மனைவியான தனஜெயம் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிற்குள் படுத்திருந்த நிலையில், வெறி நாய் வீட்டிற்குள் புகுந்து அவரை கடித்துக் கொதறி விட்டு தப்பித்து ஓடி உள்ளது.

இதனால் ஊருக்குள் வெறிநாய் ஆட்டம் அதிகமானதால், ஊர் மக்கள் பயந்து, வீட்டை, விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட எட்டு பேரும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வந்து நாய் கடிக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட தனஜயம் என்பவர் மட்டும், மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தொடர்ச்சியாக இது போல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமம் கிராமமாக சென்று, ஆய்வு மேற்கொண்டு வெறிநாய் தொல்லை -யை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *