Re – Release Movies: ரஜினி vs கமல் வசூலில் முந்தியது யார்!

Advertisements

காலம் காலமாக இரு பெரும் கதா நாயகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது அந்தந்த நாயகர்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு பண்டிகை தான். ஆம், எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி -கமல், விஜய் – அஜித், தனுஷ் – சிம்பு என இந்த பட்டியல் இன்று வரை நீண்டு வருகிறது.

பெரும்பாலும் இப்படிபட்ட பெரிய நாயகர்களின் படங்கள் குறிப்பிட்ட பண்டிகை நாட்களை குறி வைத்து வெளியாகும். கதை ரசிக்கும் படியாக இருக்கும் பட்சத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் இரண்டு படங்களுமே வசூலை ஈட்டும்.

மேலும், தற்போது பல பிளாக்பஸ்டர் படங்கள் அல்லது பல பழைய நல்ல திரைப்படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர் அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள். இது வெறும் லாபம் பெறும் நோக்கத்தோடு இல்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பை கூறலாம்.

அப்படி எம் ஜி ஆர், சிவாஜி படங்கள் வெளியாகி வந்த நிலையில், அதன் பின்னர் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களும் வெளியாகி வந்தன. அப்படி தான் தற்போது இரண்டு தரமான வெவ்வேறு ரசனைகளை உள்ளடக்கிய படங்களை அதன் தயாரிப்பார்கள் ரீ – ரிலீஸ் செய்து கல்லா கட்டி உள்ளனர்.

ஆம், அவை ரஜினியின் “முத்து” திரைப்படமும், கமலின் “ஆளவந்தான” படமும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து உள்ளன. இந்த நிலையில், இரு படங்களுமே திரையரங்குகளில் நல்ல வசூலை ஈட்டி உள்ளன. முத்து 24 லட்சமும், ஆளவந்தான் 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளன. மேலும், இதே போல பல சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் திரையிட்டு லாபம் பார்க்க தயாரிப்பாளர்கள் பலர் பிளான் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *