
தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகே உள்ள கம்பளியில்குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்.இதி ல் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளி காட்டுப் பகுதியில் ஒருவர் இரத்த வெள்ளத்துடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து ஆய்க்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆய்க்குடி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனை செய்வதற்காகத் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் கம்பிளி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 32 என்பதும், மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த (கம்பிளி) சுரேஷ்(26), சிவா(என்ற) பன்னீர்செல்வம்(27) என்பதும் இவர்கள் ராஜ்குமாரும் தொடர்ந்து மது அருந்தும் பழக்கமுடையவர்கள் என்றும் சம்பவ நடைபெற்ற அன்று மூன்று பேரும் மது வாங்கிவிட்டு கம்பிளி காட்டுப் பகுதியில் சென்று மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது மூன்று பேருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறு மாதத்திற்கு முன்னர் சுரேஷ், பன்னீர்செல்வம் ஆகிய இருவருடைய நண்பர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இதற்குக் காரணமாக ராஜ்குமார் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் நண்பரின் இறப்புக்கு காரமாக இருந்தாரெனக் கூறி மது வாங்கி அழைத்துச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து ராஜ்குமாரை சராமாரி வெட்டிக் கொலை செய்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சுரேஷ், சிவா (என்ற) பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் தாங்கள் தான் கொலை செய்தது என விசாரணையில் ஒப்புக்கொண்ட இருவரையும் தென்காசி நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கம்பிளி காட்டுப் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


