Puducherry – The Sacred Heart Basilica: சாம்பல் புதன்.. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள்!

Advertisements

கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அரையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் தவம் இருந்தார். அவ்வாறு இயேசு தவக்காலம் தொடங்கியதை சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாம்பல் புதன் இன்று தொடங்கியது. இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்குச் சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது. தவக்காலம் இன்று துவங்கி, 40 நாள்களுக்குக் கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நாட்களை இறை ஆர்வலர்கள், புனித நாட்களாகக் கருதுவர். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதே போல் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள மிகவும் பழைமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *