Electoral Bond Case: ரெய்டுகளுக்கு பின்னர் நன்கொடை அளித்த நிறுவங்களின் விவரம் வெளியிடு!

Advertisements

மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளுக்கு பின்னர், அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள்மூலம் பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.

** பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய நாள் 02/04/2022; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 07/04/2022

** அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரைக் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி அந்த நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.

** ஷிர்டி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 20/12/2023; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 11/01/2024

** டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 13/11/2023; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 17/11/2023

** கலபட்டரு ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 04/08/2023; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/10/2023

** மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 14/07/2022; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/10/2022

** ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 31/03/2022; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 07/10/2022

** யஷோ மருத்துவமனைகள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 26/12/2020; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 2021 ஏப்ரல் முதல் 2023 அக்டோபர் மாதம்வரை

** டொரண்ட் பவர் எனும் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/01/2024; தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு PM Kusum திட்டத்தின் கீழ் சோலார் தகடுகள் அமைப்பதற்கான ரூ.1540 கோடி மதிப்பிலான டெண்டர் மகாராஷ்டிர அரசிடமிருந்து கிடைத்தது.

** ஆப்கோ எனும் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/01/2022; வெர்சோவா – பாந்த்ரா கடல் பாலம் அமைப்பதற்கான ரூ.9000 மதிப்பிலான டெண்டர் மகாராஷ்டிர அரசுமூலம் அந்நிறுவனத்துக்கு கிடைக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *