Prostitution: 6 ஆண்டுகளாக நடிகைகள் பாலியல் தொழில்!

Advertisements

சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக முன்னணி சினிமா நடிகைகளை வைத்துப் பாலியல் தொழில் நடத்தி வந்த துணை நடிகை ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து துணை நடிகை ஒருவர் மீட்கப்பட்டார். சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அடிக்கடி வந்து செல்வதாக அப்பகுதிகுடியிருப்புவாசிகள் விபசார தடுப்பு பிரிவுக்குத் தகவல் அளித்தனர். அதன்படி விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி உத்தரவுப்படி, விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் விசாரணை நடத்தினர்.

அப்போது, பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த வைதேகி (50) என்பவர், மார்க்கெட் இழந்த சினிமா நடிகைகளை வைத்துப் பாலியல் தொழிலில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படையினர், போலீஸ்காரர் ஒருவரை வாடிக்கையாளர்போலத் துணை நடிகை வைதேகியுடன் பேச வைத்தனர். அதற்கு அவர், ‘முன்னணி நடிகைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 ஆயிரம், துணை நடிகைகளுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும். முன்னணி நடிகை தான் வேண்டும் என்றால், ஒரு நாளுக்கு முன்பே ரிசர்வ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போதைக்கு, என்னிடம் துணை நடிகை ஒருவர் மட்டும் இருக்கிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் குழுவினர், ஒரு வழியாகப் பேரம் பேசி, ஒரு மணி நேரத்திற்கு ரூ.8 ஆயிரத்துக்கு துணை நடிகையை ‘புக்’ செய்துள்ளனர். பின்னர் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான குழுவினர், காவலர் ஒருவரை வாடிக்கையாளர்போல் முதலில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பினர். அவரைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் 30 வயது பெண்ணை வைத்து வைதேகி பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. உடனே இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அதிரடியாகப் பாலியல் தொழில் நடத்தி வந்த துணை நடிகை வைதேகியை கைது செய்தனர்.

பிறகு வைதேகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் கூறியதாவது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாத முன்னணி நடிகைகளை வைத்து 6 ஆண்டுகளாகச் சென்னையில் பாலியல் தொழில் செய்து வருகிறேன். தொழிலதிபர்கள் முதல் வாலிபர்கள்வரை நடிகைகளின் அழகுக்கு ஏற்றபடி விலை நிர்ணயம் ெசய்து, பாலியல் தொழிலுக்கு என வைத்துள்ள வாட்ஸ் அப்குழுக்களில் புகைப்படம் மற்றும் விலை பட்டியலை அனுப்புவேன். அவர்கள் தங்களுக்கு பிடித்த அல்லது பணத்தை நிர்ணயித்து எங்களிடம் தொடர் கொள்வார்கள். அவர்களுடன் நடிகைகளை அனுப்புவேன் என்று அவர் கூறியதாகப் போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து, துணை நடிகை, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 6 ஆண்டுகளாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த முன்னணி நடிகைகள்குறித்த பட்டியலை எடுத்துப் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *