Priyanka Gandhi Vadra:வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு!

Advertisements

சண்டிகர்: நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கு வரும் மே 25ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதனால், சிர்சா மாவட்டத்தில் ரோடு ஷோவில் பிரியங்கா பங்கேற்றார். அவரைக் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். ரோடு ஷோவில் பிரியங்கா பேசியதாவது: ஹரியானாவில் பா.ஜ., வுக்கு எதிரான அலை வீசுகிறது. பா.ஜ., வின் அரசியலை கண்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர். நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

நீதி வெல்லும்

அரசியல் மாற்றம் வரும். பா.ஜ. அரசின் அநீதிக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியின் நீதிப்போர் தொடர்கிறது. நீதி வெல்லும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் என்ற வார்த்தைகள் மக்கள் வாயிலிருந்து வந்தது இல்லை. பத்து வருடமாகப் பிரதமர் மோடி ஆட்சியிலிருந்து உள்ளார். அவர் மக்களுக்கு என்ன செய்வேன் என்று சொல்வதில்லை?. மக்களுக்காகப் பிரதமர் மோடி எதும் செய்யவில்லை. இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *