Sexual Harassment: தனியார் பள்ளி முதல்வர் கைது!

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். ரெட்டணை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்குப் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் கார்த்திகேயன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் அந்தப் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி பெற்றோரிடம் இந்தப் புகாரைத் தெரிவித்ததும் மாணவியின் பெற்றோர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்துள்ளனர். இதன்பிறகு பள்ளி முதல்வரை விழுப்புரம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வரைத் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வரை இன்று காலைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *