மோடியும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் பேச்சு.!

Advertisements

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மிகவும் பயனுள்ள உரையாடல் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட மண்டல அளவிலான சிக்கல்கள், பன்னாட்டு அளவிலான சிக்கல்கள் குறித்தும் இருவரும் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

உலக அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் இரு நாடுகளும் தொடர்ந்து பாடுபது என உறுதியெடுத்துக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *