மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி!கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது ஸ்பெயின்அணி!

Advertisements

மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் – கோஸ்டா ரிகா அணிகள் நேற்று மோதின. முதல் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி அடுத்தடுத்து 3 கோல் போட்டு அசத்தியது. பதில் கோல் அடிக்க கோஸ்டா ரிகா மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 2வது பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாத நிலையில், ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

கனடா – நைஜீரியா அணிகள் மோதிய பி பிரிவு லீக் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. ஏ பிரிவில் சுவிஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தியது. நியூசிலாந்தின் வெலிங்டன் ரீஜனல் அரங்கில் நடந்த போட்டியில், கோஸ்டா ரிகா அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஸ்பெயின் வீராங்கனைகள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *