Pranitha Subhash: ஆடையின்றி பாத்டப்பில் ஆனந்த குளியல் போட்ட நடிகை … காட்டுத்தீ போல் பரவும் போட்டோஸ்!

Advertisements

நடிகை பிரணிதா சுபாஷ், நுரை ததும்ப இருக்கும் பாத் டப்பில் ஆடையின்றி குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

கன்னட நடிகையான பிரணிதா, கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த உதயன் என்கிற படம்மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாகக் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து கார்த்திக்கு ஜோடியாகச் சகுனி திரைப்படத்தில் நடித்தார் பிரணிதா. அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாஸ் திரைப்படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரணிதா.

மாஸ் படத்தில் சூர்யா உடன் பிரணிதாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும், படம் பிளாப் ஆனது. இதையடுத்து ராசியில்லாத ஹீரோயின் எனப் பெயரெடுத்த பிரணிதாவுக்கு பட வாய்ப்புகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. கடைசியாகத் தமிழில் இவர் நடிப்பில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்கிற திரைப்படம் வெளியானது.

அப்படமும் தோல்வியைத் தழுவியதால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு கிளம்பிய பிரணிதா, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்தார். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலனான, நிதின் ராஜு என்கிற தொழிலதிபரைக் கரம்பிடித்தார் பிரணிதா, இந்த ஜோடிக்குத் தற்போது அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

குழந்தை பெற்ற பின்னரும் சினிமாவில் நடித்து வரும் பிரணிதா, அண்மையில் கன்னடத்தில் வெளிவந்த பிராமண அவதாரா என்கிற திரைப்படத்தில் சீதையாக நடித்திருந்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தன்னுடைய மூன்றாவது திருமண நாளைத் தனது கணவருடன் தாய்லாந்தில் கொண்டாடி இருக்கிறார் பிரணிதா.

அங்குக் கணவருடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தைப் பதிவிட்டு வந்த அவர், திடீரெனப் பாத்டப்பில் ஆடையின்று ஆனந்தமாகக் குளியல் போடும்போது எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். பிரணிதாவின் பாத்டப் போட்டோ தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *