அவர் டை பிரேக்கில் சக வீரரும், உலக சாம்பியனுமான டி.குகேசை வீழ்த்தினார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றார்.
இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தார்.
நெதர்லாந்து சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார்.
நெதர்லாந்திலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் அவர் வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சந்தனமாலை, பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி, பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பிரக்ஞானந்தாவை வரவேற்றனர்.