தமிழகத்திற்கு 6,000 மின் துணை நிலையங்கள் தேவை – அமைச்சர் நிர்மல் குமார் தகவல்!

கடந்த ஆட்சியில் பாராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் மின்மாற்றிகள் பழுந்தடைந்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அருகே அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அங்குப் பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, மின்தடையின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாட்டில் தினமும் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகிறது, எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்படுகிறது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மின் உற்பத்தி பகிர்மான மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், நாடு முழுவதும் மின் பற்றாக் குறை உள்ளதால், மத்தியத் தொகுப்பில் இருந்து போதிய மின்சாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். தமிர்நாட்டிற்கு 6 ஆயிரம் மின் துணை நிலையங்கள் தேவைப்படுவதாகக் கூறினார். கடந்த ஆட்சியில் பாராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் மின்மாற்றிகள் பழுந்தடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். எனவே, 6 ஆயிரம் மின் மாற்றிகளை சீரமைக்க வேண்டியுள்ளதாகவும், மின்மாற்றிகள் உள்பட பழைய மின் சாதனங்கள் மாற்றப் பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *