ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானிக்கு வெட்கமாக இல்லையா? என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி குறித்து அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, மம்தானி வெறுப்பை தூண்டுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அவர் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்களுக்கும் மேயராக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். ஆனால் நியூயார்க் மேயர் ஒரு குழுவை மற்றொரு குழுவினருக்கு எதிராக திருப்ப முயற்சிப்பதாகத் தெரித்தார்.
இதற்கிடையே தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த மம்தானி, நெதன்யாகுவை ஒரு போர் குற்றவாளி என்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலை செய்தவர் என்று குற்றம் சாட்டினார். இதற்குபதிலளித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, யூத மக்களை படுகொலை செய்த ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

