மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பில் முடிந்தது. இரு கட்சினரும் சட்டை பிடித்துக் கொண்டு சண்டை போட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் மண்டலம் 11 க்கு உட்ப்பட்ட 145 வது வார்டுக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டமானது நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே கைகலப்பு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதனுக்கும் திமுக 145 ஆவது வட்ட செயலாளர் ஆலனுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதோடு கைகலப்பாகவும் மாறியது. இதனை அடுத்து அங்குக் கூடியிருந்த இரு கட்சியினரும் மாறி மாறித் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இரு கட்சியினரும் மாறி மாறிச் சட்டையைய் பிடித்துக் ககைலப்பில் ஏற்ப்பட்டதால் பெரும் பரபரப்பானது உண்டாக்கியது.
அதிமுக கவுன்சிலருடன் வந்திருந்த சிலரில் பெண் ஒருவர் மனு மனு கொடுக்கும்போது பொறுமையா கொடு எனத் திமுகவினர் காட்டமாகப் பேசியதாகவும் அதற்குத் திமுகவினரை கவுன்சிலர் பதிலுக்குக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் உதவி ஆணையர் அருண் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிமுக மற்றும் திமுகவினர் கலைந்து செல்லாமல் அதே இடத்தில் ஒன்று கூடி இருப்பதால் பதட்டமான சூழலானது உருவாகியுள்ளது.முன்னதாக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
