Pope Francis: போரும், வன்முறையும் தீர்வாகாது!

Advertisements

போரும், வன்முறையும் தீர்வாகாது! போப் பிரான்சிஸ்…

அமெரிக்க அதிபர் ஜோப்பைடனை தொடர்ந்து  இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேலுக்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இன்று பிற்பகலில் இஸ்ரேலுக்கு  ரிஷி சுனக்  பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது பயணம் இருக்கும் என்றும் பல்வேறு கோரிக்கைகளையும் வைக்க உள்ளதாகத் தெரிகிறது.


இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 3,450- ஐ கடந்தது என்று அங்குள்ள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எந்தப் பிரச்சினைக்கும் போரும், வன்முறையும் தீர்வாகாது என்று போப் பிரான்சிஸ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வரும் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அமைதிக்கான பிரார்த்தனை நாளாக அறிவிக்க இருப்பதாகவும் உலக அமைதிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க அனைவரையும் அழைப்பதாகவும் போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

லெபனான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:- லெபனானில் தற்போது கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலை இன்னும் மோசம் அடையலாம். எனவே, லெபனான் நாட்டில் உள்ள ஆஸ்திரேலிய மக்கள், வெளியேற விரும்பினால் உடனடியாகக் கிடைக்கக்கூடிய விமானத்தில் புறப்பட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *