Pooja Hegde: கிளாமர் உடையில் நடனம்.. ரசிகர்களைக் கவர்ந்த நடன வீடியோ!

Advertisements

தென்னிந்திய ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவருடைய படம் வெற்றியடைந்தால் சரி வெற்றியடைய வில்லை என்றாலும் சரி ரசிகர்களிடையே இருக்கும் இவருடைய கிரேஸ் மட்டும் குறைவே குறையாது.

விஜய், மகேஷ் பாபு, ராம் சரண், ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் பிரபாஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் பூஜா இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் தேவா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கப் பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் வீடியோ அல்லது புகைப்படங்கள் எது வந்தாலும் உடனடியாக இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டேவின் நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய படங்களில் இடம்பெற்ற புட்ட போம்மா மற்றும் அரபிக் குத்து ஆகிய பாடல்களுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் பூஜா. அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *