Pollachi International Balloon Festival: களைகட்டிய பலூன் திருவிழா!

Advertisements

பொள்ளாச்சியில் 9.வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது. 8 நாடுகளிலிருந்து கொண்டு வரபட்ட 11 பலூன்கள் வானில் பறந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துக் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி: சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் இன்று ஒன்பதாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது.இந்த வெப்ப காற்று பலூன்கள் வெளிநாடுகளில் மட்டுமே பறக்க விடப்பட்ட நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்படுகிறது.

இந்த ஆண்டு ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழாவுக்குப் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, வியட்நாம், என 8 நாடுகளிலிருந்து 11பலூன்கள் வரவழைக்கப்பட்டு. யானை மற்றும் பல பொம்மை வடிவில் பாலூன்களை பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்திலிருந்து வானில் பறக்க விடப்பட்டது.

இந்த ராட்சத பலூனில் வெப்ப காற்றை நிரப்பி அதை அதற்கெனப் பிரத்யேக பைலெட்டுகளை கொண்டு வானில் பொள்ளாச்சியை சுற்றி வட்டமடித்து பறந்தது.60 அடி முதல் 100 அடிவரை உயரம் கொண்ட இந்த மிகப்பெரிய ராட்சச பலூன்களில் வெப்ப காற்றின் மூலம் பறக்க விடப்படுகிறது.

இந்தப் பலூன்கள் தரை மட்டத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர்வரை மேலே செல்லும் எனவும் ஒரு பலூனில் மூன்று பேர் பயணிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இந்த வெப்ப காற்று பலூனில் பறக்கக் கடந்த எட்டு ஆண்டுகளும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டுப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது வருத்தமளிக்கும் விதமாக உள்ளதாகப் பலூன் திருவிழாவைக் கான வந்த பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் மாலை வேளையில் மட்டும் இந்த வெப்ப காற்று பலூனில் 100.அடி உயரம் வரை பறக்கப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கு ஒரு நபருக்கு 1600 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இன்று தொடங்கிய இந்தப் பலூன் திருவிழா 16.ஆம் தேதிவரை பொங்கல் விடுமுறை நாட்களில் நடக்கும் எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பலூன் திருவிழாவைக் கான பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *