பாலியல் சீண்டல் தெரிந்துவிடும் !பயத்தில் 6 வயது சிறுவனை கொலை செய்த 17 வயது வாலிபர் ! தருமபுரியில் நடந்த சோகம் !

Advertisements

தருமபுரி: தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், மதியரசு (வயது6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.

ஆதிமூலம் ஜே.சி.பி. ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மதியரசு திடீரென்று காணவில்லை. உடனே சிறுவனின் தந்தை ஆதிமூலம் தனது உறவினர்கள் வீடுகள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் என்பவருடைய மகன் பிரகாஷ் (வயது19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பிரகாஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவன் மதியரசை கொலை செய்து அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உடலை போட்டுள்ளதாக தகவல் தெரிவித்தான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பிடிபட்ட பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். கடந்த 16-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மதியரசுவை நான் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றேன். இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் சொல்லிவிடுவான் என்று பயத்தில், அந்த சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

அதன்பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.

மாயமான சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கூறியதால், போலீசார் சிறுவனை தேடி என்னிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் நான் மாட்டி கொண்டேன் என்று போலீசாரிடம் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் கொலை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *