தலைவர் 171 படத்தை உறுதி செய்த ஒரு பிரபல நடிகர்!

தொடர்ச்சியாக தனது தனித்துவ திரை உரையாடல் மூலம் இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், திரிஷா போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் “லியோ” படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

ஏற்கனவே, லியோ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தை கலக்கி வரும் நிலையில், விரைவில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல் வெளியாக உள்ளது. இந்த நிலையில், லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து படத்தை இயக்க போகிறார் என்கிற கேள்வி தான் இணையத்தை வட்டமடித்து வருகிறது.

ஆம், ஜெயம் ரவி, கார்த்தி, சூரியா, ரஜினி, சிரஞ்சீவி என பல பெயர்கள் லைன் அப்பில் அடிபட்ட நிலையில், தற்போது அது சூப்பர் ஸ்டார் உடன் தான் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைக்க போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. இதை பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனி உறுதி செய்துள்ளார்.

தலைவர் 171 படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடிகளை தர ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது. த

ற்போது ரஜினி மாலத்தீவில் ஓய்வு எடுத்து வருவதால், அவர் சென்னை திரும்பிய பிறகு தா சே ஞானவேல் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

தனது 170 படத்தை அடுத்த மூன்று மாதங்களில் முடித்து 171 படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்றும், 2024 பிப்ரவரியில் இதன் ஷூட்டிங் தொடங்கி அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *