கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் தென் பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான விநாயகர் மற்றும் சுப்பிரமணிய முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் முன்பு பல ஆண்டுகளாக சிவன் கோயில் உள்ள இடத்தில் கருங்கற்களால் படிகள் அமைத்துள்ள நிலையில் இந்த இடத்தில் பல ஆண்டு களாக தை பொங்கல் அன்று பெண்கள் பொங்கல் வைத்தும், கால் நடைகளுக்கு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் இறந்தவர்களுக்கு பொது மக்கள் படித்துறையில் ஈமச்சடங்குகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த சிலர் அறங்காவலர் என்று கூறிக்கொண்டு பல ஆண்டுகள் பூஜைகள் செய்யும் படித்துறையில் புதியதாக டைல்ஸ் போடும் பணிக்கு தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்து அறநிலைத்துறை செயலை கண்டித்தும் ஊர் பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் ஒருநாள் உண்ணாவிரதம் மேற் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமுருகன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை போராட்டம் கைவிடப் பட்டது.