செமிகண்டக்டர் துறையில் 1 லட்சம் பொறியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி : பிரதமர் மோடி.!

குறைக்கடத்தித் தொழில்துறைக்காக ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க தங்கள் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் செமிகான் இந்தியா 2026 என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது,  இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததாகவும், இந்தியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு மற்றுமொரு சான்றாகும் என்றும் குறிப்பிட்டார். இந்தியா விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில், உள்ள உபகரண நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாய்ப்புகளைத் தவறவிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார். குறைக்கடத்தித் தொழில்துறைக்காக ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க தங்கள் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆராய்ச்சி செய்யும் இளைஞர்கள் முன்வந்து இங்குள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *