அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் கொலம்பியாவுடனான தனது நெருங்கிய நட்பை இந்தியா பெரிதும் மதிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கொலம்பியா அதிபருக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கொலம்பியா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் கொலம்பியாவுடனான தனது நெருங்கிய நட்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது. வரும் ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.



