Spirituality: திருமாங்கல்யத்தின் தத்துவம்!

Advertisements

தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தைச் சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று கூறுகின்றனர்…

பெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்:

பெண்கள் திருமண பந்தத்தின்போது அணியும் தாலி என்பது மற்ற ஆபரணங்களைப் போல இல்லாமல் இதனைப் புனிதமானதாகக் கருதுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும், எது எப்படி இருப்பினும் இதன் பொருளும் இதன் முக்கியத்துவமும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது.

தாலி என்பது மரியாதை, காதல், அன்பு மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும், பெண்ணும் இணையும் திருமண வாழ்வில் பிரதிபலிக்கும் அடையாளமாகக் காணப்படுகிறது. இது முக்கியமாக இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் அடையாளமாகவும் உள்ளது.இதன்படிதான் தாலி என்பது இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொதுவாகத் தாலி வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கபடுகிறது. இந்தத் தாலியில் கடவுள் சிவபெருமானின் திருவுருவம் வைத்தால் மூன்று கிடைமட்ட கோடுகளையும், கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் மூன்று செங்குத்தான கோடுகளைக் கொண்டும் வடிவமைக்கப்படுகிறது.

மேலும் இந்தத் தாலியை அறிவியலின் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தைச் சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று கூறுகின்றனர்.
வடஇந்தியாவில் இந்தத் தாலி என்பது கறுப்பு மற்றும் தங்கமணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும்.

இதில் உள்ள தங்கமணிகள் கடவுள் பார்வதி தேவியையும், கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்கமணிகள் செல்வத்தையும், சந்தோஷத்தையும், வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும், வளத்தையும் காக்கின்றனர் கருப்பு மணிகள் என்பவை கணவன், மனைவிக்கு இடையேயுள்ள உணர்வுபூர்வமான பந்தத்தில் முக்கியத்துவம் வகுக்கிறது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி, திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது.

மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் காக்கிறது. இந்தத் தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்தப் பெண்கள் மிகவும் பயப்படுவர். பின் கடவுளை வேண்டித் தன் கணவனைக் காக்கவேண்டுமென்றும், நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றும் வழிபாடு மேற்கொள்வார்கள்.ஆனால் தற்போதைய மாடல் வாழ்க்கையில் தாலி என்கின்ற புனிதநூல் சடங்குகள் மறைந்து கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் எப்போதாவது தாலியை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது அணிதல் என்கின்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாகத் திருமணப்பந்தத்தில் மாறிவருகிறது.

இருப்பினும் இந்தத் தாலி என்கின்ற புனிதநூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *