தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் -அன்புமணி!

ளித்துப் போன நாடகங்களை மீண்டும் அரங்கேற்ற வேண்டாம் என்றும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக அரசுக்குப் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்தியில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்கள்மீது நள்ளிரவில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொடுங்கோல் ஆட்சியை ஸ்டாலின் நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்போது தூய்மைப் பணியாளர்களின் ஆபத்பாந்தவனாக வேடம் தரித்து நாடகங்களை நடத்திக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை மாநகரப் பகுதிகளில் குப்பை அள்ளும் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும், தங்கள் பணியை நிலைப்படுத்த வேண்டும் என்பதே துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கையெனக் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை விட,  இரு மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு 2300 கோடி ரூபாயை வாரி இறைப்பதையே முக்கியம் என்று கருதியதால் தான் அவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றவில்லையெனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *