நான்கு நாள் அரசுமுறைப் பயணம் : தாஷ்கண்டு சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

Advertisements

நான்கு நாள் சுற்றுப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெக்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று முதல் ஆகஸ்டு முதல் நாள் வரை நான்கு நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அதற்காக இன்று தில்லியில் இருந்து தனி விமானத்தில் உஸ்பெக்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இந்தப் பயணத்தின்போது உஸ்பெக்கிஸ்தான் அதிபர் மிர்சியோயேவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார்.

அப்போது இரு நாடுகளிடையே இப்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகச் பேச உள்ளனர். இதேபோல் வணிகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு, உரியாற்றல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்த உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி உஸ்பெக்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள மிகப்பெரிய கட்டடத்தில் இந்திய தேசியக் கொடியின் படம் ஒளிரவிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *