மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தவெக செயல்படும் : செங்கோட்டையன்.!

Advertisements

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அருகில் அமர்ந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியதாகவும் மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தவெக செயல்படும் என்றும் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தை இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாக உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில் முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயில், சென்னை புழல் சிறை ஆகிய இடங்களில் ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.

சென்னை குடிநீர் திட்டப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்து, மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். நேபாள துயரச் சம்பவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நிலவரங்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் அருகில் அமர்ந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியதாகவும் மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தவெக செயல்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *