சுற்றுலா சென்ற 320 இந்தியர்களைக் காணவில்லை என வெளியுறவு அமைச்சகம் தகவல்.!

நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற இந்தியர்களில் 320 பேரைக் காணவில்லை அல்லது தொடர்புகொள்ள முடியவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெயிஸ்வால் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நேற்றிரவு 10 மணி நிலவரப்படியுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நேபாளத்துக்குச் சென்ற தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 21 பேரும், திரிசூலி திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 63 பேரும் மீட்கப்பட்டுக் காத்மண்டில் இருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய சுற்றுலாப் பயணிகள் 149 பேர் சீனாவில் இருந்து நேற்று நேபாளத்துக்கு வந்துள்ளதாகக் குறப்பிட்டுளள்து.

மேலும் 400 பேர் சீனாவில் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை வெளியேற்றிக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர இந்தியர்கள் 320 பேரைக் காணவில்லை அல்லது தொடர்புகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *